Islamic Widget

July 03, 2012

கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகள் தேர்வு.

கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் 01/07/2012 அன்று கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அலுவலகத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்ததெடுக்கப்படுவதற்கான ஆலோசனைக்காக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
ஏழு தாலுக்காகளிலிருந்தும் (கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்குடி, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், திட்டக்குடி) மாவட்ட பிரதிநிதிகள் மற்றும் கடலூர் நகரம், கடலூர் துறைமுகம், லால்பேட்டை, விருத்தாசலம் ஜமாஅத் நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். தற்போதுள்ள நிர்வாகிகளே தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும் என்ற கருத்தை அனைவரும் வலியுறுத்தி பேசினர். அனைவரின் ஒருமித்த கருத்தை ஏற்று ஜனாப். ஹாஜி M.S. முஹம்மது யூனுஸ் தலைவராகவும் ஜனாப். I. முஹம்மது கமாலுத்தீன் பொது செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர். பொருளாளராக இருந்த விருத்தாசலம் சிக்கந்தர் ஹயாத் கான் மறைவுக்குப்பின் காலியாயிருந்த பதவி மூன்று மாத காலத்திற்குள் செயற்குழுவின் ஏற்புடன் நிரப்பப்படும்.என்று தீர்மானிக்கப்பட்டது.

No comments:

Post a Comment