பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் சார்பில் நடைபெற்ற 12-ம் ஆண்டு பரிசளிப்பு விழாவில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் அதிகப் மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தங்கம் - வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள், சுமார் 1000 மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் விழா நேற்று மஹ்மூதியா ஷாதி மஹாலில் நடைபெற்றது.
இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் தலைவர் டாக்டர் நூர் முஹம்மது தலைமையில் நடைபெற்ற இப்பரிசளிப்பு விழாவினை Z.ஃபஜ்லுர் ரஹ்மான் தொகுத்து வழங்கினார். அப்துல் காதிர் உமரி கிராஅத்துடன் துவங்கிய விழாவிற்கு ஜமாஅத்தின் செயலாளர் ஹெச். ஷாஜகான் வரவேற்புரையாற்றினார். கேப்டன் ஹமீது அப்துல் காதர், ஜமாஅத் து. தலைவர் M.S.அலி அக்பர் , செயலாளர் சுல்தான் அப்துல்காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சான்றிதழ்களுடன் பதக்கங்கள் மற்றம் பரிசுகள் வழங்கப்பட்டு விழா முடிவுக்குப் பின் மாணவ - மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.
நன்றி: mypno
No comments:
Post a Comment