பரங்கிப்பேட்டை: மனிதநேய மக்கள் கட்சி பரங்கிப்பேட்டை கிளை சார்பில் கும்மத்து பள்ளியில் இயங்கி வரும் அரசு தொடக்கப்பள்ளி மாணவ - மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் இன்று வழங்கப்பட்டது. இப்பள்ளியில் பயிலும் 50 ஏழை மாணவ - மாணவிகளுக்கு நகர ம.ம.க. நிர்வாகிகள் இலவச நோட்டு புத்தகங்களை இன்று பள்ளி வகுப்பறைகளில் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில், நகர ம.ம.க. தலைவர் ஜாக்கீர் உசேன், செயலாளர் எம்.கே. பிலால், பொருளாளர் செய்யது மரைக்காயர், நகர இளைஞரணி செயலாளர் பி. நஜிரான், து. செயலாளர் முஹமது ரஃபி, த.மு.மு.க. நகர செயலாளர் ஹசனலி, நகர நிர்வாகிகள் முஜிபுர்ரஹ்மான், ரஹமதுல்லா, அப்பாஸ், அமீர் அலி, இப்ராஹிம் மற்றும் இம்ரான் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
நன்றி:mypno
No comments:
Post a Comment