பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில் ஆதார் அட்டைக்கான அடையாள சேமிப்புப் பணி துவங்கியுள்ளது. கடந்த ஒரு வாரக்காலமாக இப்பணி நடந்து வந்தாலும் முறையான அறிவிப்பு எதுவும் இல்லாததால் மக்களிடம் இது பற்றிய செய்தி ழுமுமையாக சென்றடையவில்லை.
18ம் வார்டு துவங்கி நடைப்பெற்ற இப்பணி இன்று 10 வது வார்டுக்கு கும்மத்துப்பள்ளியில் நடைப் பெறுகின்றது என்று செய்தி கிடைத்ததும் அங்கு விரைந்தோம்.
எவ்வித முன்னேற்பாடும் அற்ற நிலையில் மக்களின் சலசலப்புக்கிடையே பணித் துவங்கியது. ரேஷன் கார்டுடன் வந்த பலப் பெண்கள் தங்கள் பெயர் அவர்களின் லிஸ்டில் இல்லை என்ற ஆதங்கத்தில் திரும்பி சென்றுக்கொண்டிருந்தனர். இன்று, நாளை, நாளை மறுநாள் ஆகிய மூன்று நாட்கள் 10 வது வார்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
10க்கு கீழுள்ள வார்டுகளுக்கான எந்த அறிவிப்பும் இதுவரை இல்லை.
5 பேப்பர்களில் பயனாளர்கள் பெயர்கள் பிரிண்டவுட் செய்யப்பட்டு வந்தவர்களின் பெயர்கள் சரிபார்க்கப்பட்டது. விடுபட்டப்பெயர்களே அதிகம் என்ற தகவல் கிடைத்ததும் இப்பணியை சூப்பர் வைஸிங் செய்பவரை தொடர்புக் கொண்டோம். pnotimes ல் இருந்து பேசுகிறோம். உங்களை சந்திக்க வேண்டும் என்றோம். இதோ அங்குதான் சார் வருகிறோம் என்று சிரிது நேரத்தில் வந்தனர்.
ஒழுங்குமுறையற்ற இந்த ஏற்பாடு குறித்து வினவினோம்.
டைம்ஸ்: முறையான அறிவிப்பு இல்லாமல் இந்த பணி நடக்கின்றதே..
ஆதார்: கவுன்ஸிலர்களுக்கு தகவல் கொடுத்தே நாம் இந்த பணியை செய்கிறோம்.
டைம்ஸ்: எந்தெந்த வார்டு முடிந்துள்ளது
ஆதார்: 18 முதல் 10 வரை ஆங்காங்கே பணி நடக்கின்றது. 11 வது வார்டுக்கு இடம் கிடைக்காததால் இன்னும் தொடங்கவில்லை.
டைம்ஸ்: அதிகமான நபர்களின் பெயர்கள் இந்த லிஸ்டில் விடுபட்டுள்ளதே… ரேஷன்கார்டு, ஓட்டர் ஐடி அவர்களிடம் இருக்கும் போது அதை ஏன் நீங்கள் எடுத்துக் கொள்ளவில்லை.
ஆதார்: கடந்த ஓராண்டு முன் மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தியது. அந்த கணக்கெடுப்புப்படியே இப்போது இந்த பணி நடைப் பெறுகின்றது. எங்களுக்கு தாசில்தார் அலுவலகத்திலிருந்து கிடைத்துக்கும் லிஸ்ட்டை வைத்தே எங்களால் அடையாளப்படுத்த முடியும். அந்த லிஸ்டில் இல்லாதவர்கள் எந்த ஆவனம் கொண்டு வந்தாலும் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஒன்னறை வருடத்திற்கு முன் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது கணக்கெடுக்கப்பட்ட வீடுகளுக்கு ஒரு சிலிப் கொடுத்திருப்பார்கள். அந்த சிலிப்புடன் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம்.
டைம்ஸ்: விடுபட்டவர்கள் என்ன செய்வது?
ஆதார்: தாசில்தார் அலுவலகத்தை தொடர்புக் கொள்ளவும். இந்த பணி இதோடு முடியாது அடுத்த மூன்று மாதத்தில் ஒரு சுற்று வருவோம். அப்போது விடுபட்டவர்கள் அடையாளப்படுத்தப்படுவார்கள்.
டைம்ஸ்: நீங்கள் வைத்துள்ள லிஸ்டில் வெறும் பெயர் மட்டுமே உள்ளது. அதை வைத்து ஆட்களை எப்படி உறுதிப்படுத்த முடியும்.
ஆதார்: ??????
டைம்ஸ்: ஒரே தெருவில் ஒரே பெயரில் பலர் இருப்பார்கள் அவர்களை எப்படி கண்டெடுப்பீர்கள்
ஆதார்: ??????
இது மத்திய அரசின் பணி என்பதால் மாநில, மற்றும் பஞ்சாயத்து போர்டுகளில் உதவிகள் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தையும் சிலர் அங்கு வெளிபடுத்தினர்.
அதிகாரிகளால் முறைப்படுத்தப்படாத இப்பணி மக்களின் நேரத்தை வீணடிக்கின்றது என்பதே இந்தக் களம் நமக்கு உணர்த்திய பாடமாகும்.
நன்றி:pnotimes
No comments:
Post a Comment