Islamic Widget

September 16, 2011

உச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி! குஜராத்தில் முன்கூட்டியே தேர்தல்

அகமதாபாத்: நரேந்திர மோடி மீதான உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து குஜராத் சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த நரேந்திரமோடி திட்டமிட்டு வருகிறார்.
குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் ஏராளமானோர் பலியானார்கள். இதில் முதல்-மந்திரி நரேந்திரமோடி மீதும், மந்திரிகள் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. கலவர வழக்குகள் தொடர்பாக மாநில அரசு தனியே விசாரித்து வருகிறது. இதற்கிடையே கலவர வழக்கில் நரேந்திரமோடி பெயரையும் சேர்க்க வேண்டும் என்று குஜராத் கலவரத்தில் கொல்லப்பட்ட காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ஜாஃப்ரியின் மனைவி ஜாக்ரியா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட முடியாது என்றும், பாதிக்கப்பட்டவர் கீழ்க்கோர்ட்டை அணுகலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது. இதில் நரேந்திரமோடி குற்றமற்றவர் போல் உச்ச நீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளதால் நரேந்திரமோடியும், பா.ஜ.கவினரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இந்த தீர்ப்பு பற்றி நரேந்திரமோடி கூறுகையில் கடவுள் மிகப் பெரியவர் என்றார். சுஷ்மா சுவராஜ் கூறும் போது நரேந்திரமோடி அக்னிப்பரீட்சையில் வெற்றி பெற்று விட்டார் என்றார்.
மேலும் குஜராத் மாநில சட்டசபைக்கு முன் கூட்டியே தேர்தல் நடத்தலாமா? என்றும் தலைவர்கள் யோசனையில் ஈடுபட்டுள்ளனர். நரேந்திரமோடிக்கு தற்போதுள்ள செல்வாக்கு அதிகரிப்பை வைத்து தேர்தல் நடத்தினால் எளிதில் வெற்றி பெற்று விடலாம் என்ற நிலையில் நரேந்திரமோடி நிலைமையை கவனமாக ஆய்வு செய்து வருகிறார்.

No comments:

Post a Comment