சேத்தியாத்தோப்பு: ""பண பலத்தை நம்பி போட்டியிடும் தி. மு.க., கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே லட்சியம் மட்டுமே நம்முன்னே இருக்க வேண்டும்'' என அ.தி.மு.க., மாவட்டச் செயலர் அருண்மொழித்தேவன் பேசினார்.
புவனகிரி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் அறிமுகக் கூட்டம் சேத்தியாத்தோப்பில் நடந்தது.தே.மு.தி.க., - இந்திய கம்யூ., - மா.கம்யூ., நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.அ.தி.மு.க., மாவட்டச் செயலர் அருண்மொழித்தேவன் தலைமை தாங்கி வேட்பாளர் செல்வி ராமஜெயத்தை அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது:
கடந்த 5 ஆண்டுகளாக வேதனைபட்டு வந்த மக்களுக்கு விடிவு காலம் ஏற்படுத்தும் தேர்தல் இது. தி.மு.க., ஆட்சிக்கு எதிராக மக்களின் மனநிலை மாறி உள்ளது. மாற்றத்தை சரியாக நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.மக்களின் மனநிலை மாறி விட்டது என்று நாம் அலட்சியமாக இருக்கக் கூடாது சரியான முறையில் கூட்டணி கட்சிகள் ஒன்று சேர்ந்து கடுமையாக உழைக்க வேண்டும். பண பலத்தை நம்பி போட்டியிடும் தி. மு.க., கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே லட்சியம் மட்டுமே நம்முன்னே இருக்க வேண்டும்.இவ்வாறு அருண்மொழித்தேவன் பேசினார்.
Source: Dinamalar

No comments:
Post a Comment