Islamic Widget

January 09, 2011

பரங்கிப்பேட்டையில் சாதனை விளக்க தெருமுனைக்கூட்டம்

பரங்கிப்பேட்டை ஒன்றிய தி.மு.கழகம் சார்பில் சாதனை விளக்க தெருமுனைக்கூட்டம் நேற்று மாலை சஞ்சீவிராயர் கோயில் தெருவில் நடைப்பெற்றது. கூட்டத்திற்கு நகர அவைத்தலைவர் வழக்கறிஞர் தங்கவேல் தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற தலைவர் முஹம்மது யூனுஸ் முன்னிலை வகித்து உரையாற்றினார்.
சிறப்புரையாற்றிய தலைமைக்கழக பேச்சாளர் நெய்வேலி விக்கிரமன், தனது உரையில் தி.மு.கழக அரசின் பல்வேறு சாதனைகளை விளக்கினார், தொடர்ந்து பேசுகையில் தமிழகத்தின் முன்னணி நாளேடுகள், வார இதழ்கள் தி.மு,க-விற்கு எதிரான நிலையினை கொண்டிருப்பதாக குறிப்பிட்டு தனது அதிருப்தியை கடுமையாக வெளிப்படுத்தினார்.
இக்கூட்டத்தில், தி.மு.க ஒன்றிய செயலாளரும், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவருமான முத்து.பெருமாள், புவனகிரி பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் வழக்கறிஞர் செல்வராஜ், மாவட்ட தி.மு.க பிரதிநிதியும், நகர இளைஞர் அணி அமைப்பாளருமான முனவர் உசேன், மாவட்ட பிரதிநிதி காண்டீபன், நகர செயலாளர் பாண்டியன், கோமு, ராஜீ, ஆரிபுல்லாஹ், பேரூராட்சி மன்ற துணை தலைவர் செழியன், சண்முகம், மாரிமுத்து ஆகியோர் கலந்துக் கொண்டனர்.


நன்றி: mypno

No comments:

Post a Comment