இஸ்லாமாபாத்: இந்தியாவுக்கு மீண்டும் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படும் என்று பாகிஸ்தான் உணவு மற்றும் விவசாய அமைச்சகம் கூறியுள்ளது.
பாகிஸ்தானில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு வெங்காயம் உள்ளிட்ட உணவு வகைகளுக்குப் பெரும் தட்டுப்பாடும், கடும் விலை உயர்வும் ஏற்பட்டது. இதையடுத்து இந்தியாவிலிருந்து பெருமளவில் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டது.இதனால் இந்தியாவில் பெரும் பற்றாக்குறை ஏற்பட்டு விட்டது. விலையும் மிகக் கடுமையாக ஏறி விட்டது. இது போதாதென்று பதுக்கல்காரர்களும் பெருமளவில் வெங்காயத்தைப் பதுக்கியதால் மக்கள் விழி பிதுங்கிப் போயினர்.இதைத் தொடர்ந்து பாகிஸ்தானிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய ஆரம்பித்தது இந்தியா. ஆனால் அங்கு மீண்டும் விலை உயர்வே தற்போது வெங்காய ஏற்றுமதிக்கு பாகிஸ்தான் அரசு தடை போட்டு விட்டது.இதையடுத்து பதிலடியாக இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு காய்கறிகளை அனுப்புவதை இந்தியா வியாபாரிகள் நிறுத்தி வைத்து விட்டனர். இதனால் பாகிஸ்தானில் தற்போது காய்கறிக்குப் பிரச்சினையாகியுள்ளதாம்.இந்த நிலையில் இந்தியாவில் வெங்காய தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் மீண்டும் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படும் என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.ஆனால் இந்த ஏற்றுமதிக்கு பாகிஸ்தானின் வர்த்தகம் மற்றும் வெளியுறவு அமைச்சகங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனவாம்
No comments:
Post a Comment