பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில் சசி தொண்டு நிறுவனமும் காவல்துறையும் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தியது.பேரூராட்சி மன்றத் தலைவர் முகமதுயூனுஸ் தலைமை தாங்கினார். போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி முன்னிலை வகித்தார்.
பேரூராட்சி மன்றத் தலைவர் மோட்டார் சைக்கிளின் முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கரை ஒட்டி, விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.
பரங்கிப்பேட்டை பஸ் நிலையத்திலிருந்து துவங்கிய பேரணி,நகரின் முக்கிய வீதிகள் வழியே வந்து மீண்டும் புறப்பட்ட இடத்தை அடைந்தது. இதில் சசி நிறுவன ஒருங்கிணைப்பாளர் மரியநாதன்,சிவக்குமார், கரிகால்வளவன், ஞானசேகரன், ஷாலினி, முடியரசன், கவிதா, சாமுண்டீஸ்வரி, நிஜந்தன், ராஜாஸ்ரீ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அன்புநாதன் நன்றி கூறினார்.
source: dinakaran
ஒரே செய்தியை இரண்டு தடவையா போடுவிங்க ??? அப்படி என்ன புது செய்தியா கிடைக்கலே உங்களூக்கு?
ReplyDelete