Islamic Widget

January 17, 2011

மின்னொளியில் ஜொலிக்கிறது சிதம்பரம் ரயில்வே மேம்பாலம்

சிதம்பரம்: சிதம்பரம் ரயில்வே மேம்பாலம் பொங்கலையொட்டி சீரியில் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதால் கடந்த இரண்டு நாட்களாக மின்னொளியில் ஜொலிக்கிறது.சிதம்பரம் - அண்ணாமலைநகர் இடையே ரூ. 18 கோடியே 2 லட்சம் செலவில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது.
 ஆனால் பாலத்தில் இரண்டு ஆண்டுகளாக விளக்கு வசதி செய்யப்படாதது பெரிய குறையாக இருந்து வந்த நிலையில், இரண்டு மாதத்திற்கு முன்பு விளக்கு போடப்பட்டது.இருண்டு கிடந்த இப்பாலம் தற்போது இரவு நேரங்களில் பளீச் மின்விளக்குகள் எரிந்து வருகிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை யொட்டி நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரயில்வே மேம்பாலத்திற்கு சீரியல் விளக்குகள் போட்டு அலங்கரித்துள்ளனர்.இதனால் இரவு நேரங்களில் பாலத்திற்கு மேலும் மெருகூட்டப்பட்ட வகையில் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்து வருகிறது.

source: dinamalar

No comments:

Post a Comment