Islamic Widget

January 27, 2011

புறவழிச் சாலையில் பஸ்கள் இயக்கினால் நடவடிக்கை : ஆர்.டி.ஓ., எச்சரிக்கை

புவனகிரி:சிதம்பரம் புறவழிச்சாலை வழியாக பஸ்கள் இயக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என சிதம்பரம் ஆர்.டி.ஓ., முனுசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.சிதம்பரம் புறவழிச்சாலை முடிக்கப்பட்டுள்ள நிலையில் கடலூரில் இருந்து புவனகிரி வழியாக சென்று வரும் பெரும்பாலான பஸ்கள் புறவழிச்சாலை வழியாக சென்றது.
இதனால் பாதிக்கப்பட்ட புவனகிரி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த 11ம் தேதி சாலை மறியலில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையின் போது, வரும் காலங்களில் சிதம்பரம் - கடலூர் செல்லும் அனைத்து பஸ்களும் புவனகிரி வழி என்று எழுதப்பட்டு புவனகிரி வழியாக செல்லும் என உறுதியளிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் பல பஸ்கள் புறவழிச்சாலையிலேயே சென்றன.அதனைத் தொடர்ந்து புவனகிரி போலீஸ் ஸ்டேஷனில் சிதம்பரம் மோட்டார் வாகன ஆய்வாளர் முனுசாமி தலைமையில் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் சிதம்பரம் - கடலூர் செல்லும் அனைத்து பஸ்களிலும் புவனகிரி வழி என்று எழுத வேண்டும், புவனகிரி வழியாக செல்லாத அனைத்து பஸ்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.கூட்டத்தில் அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர்கள் மணிவண்ணன், ஸ்ரீதரன், தனியார் பஸ் மேலாளர்கள், பொதுமக்கள், சமூக நல அமைப்பினர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment