Islamic Widget

January 04, 2011

ஆஸி. கிரிக்கெட் அணியில் முதல் முஸ்லிம் வீரர் உஸ்மான் காஜா

சிட்னி,ஜன.3:ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு வீரர் இடம் பிடித்துள்ளார். இவர் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவர். இஸ்லாமாபாத்தில் பிறந்தவர். 24 வயதேயாகும் அந்த இளம் வீரரின் பெயர் உஸ்மான் காஜா. இவர் இஸ்லாமாபாத்தில் பிறந்தவர்.

 இவரது குடும்பம் ஆஸ்திரேலியாவில் செட்டிலாகி அந்த நாட்டு குடியுரிமைப் பெற்றதாகும்.வளரும் கிரிக்கெட் வீரராக இருந்து வந்த காஜா ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடிக்கும் வேகத்துடன் தீவிரமாக கிரிக்கெட் ஆடி வந்தார். தற்போது அவருக்கு ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைத்துள்ளது, அதுவும் டெஸ்ட் அணியில். அதை விட முக்கியமாக இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் பெருமையைப் பெற்றுள்ளார் காஜா.இரு நாடுகளுக்கும் இடையிலான 5வது டெஸ்ட்போட்டி இன்று சிட்னியில் தொடங்கியது. இதில் காஜாவும் இடம் பெற்றுள்ளார்.இங்கிலாந்து பந்து வீச்சு குறித்து சற்றும் பயமில்லாமல் மிகவும் தைரியமாக ஆடி வருகிறார் காஜா. தேநீர் இடைவேளையின் போது அவர் ஆட்டமிழக்காமல் 24 ரன்கள் எடுத்திருந்தார்.

No comments:

Post a Comment