Islamic Widget

January 12, 2011

ரூ.75 லட்சத்தில் ரவுண்டானா பணி தீவிரம்

சிதம்பரம்:சிதம்பரம் மேம்பாலத்தில் அடிக்கடி நிகழும் விபத்துகளுக்கு தீர்வு காணும் வகையில் பாலத்தின் இரு முகப்பிலும் 75 லட்சம் ரூபாய் செலவில் ரவுண்டான அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.சிதம்பரம் அண்ணாமலை நகர் இடையே 18 கோடி ரூபாய் செலவில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு மக்களின் 30 ஆண்டு கால கனவு நனவாக்கப்பட்டது.
பல்வேறு போராட்டங்களுக்கிடையே கட்டப்பட்ட இப்பாலம் 50க்கும் மேற்பட்ட கிராமமக்கள் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவ, மாணவிகள், ஊழியர்கள், மருத்துவமனைக்கு செல்பவர்கள் பயனடைந்து வருகின்றனர்.பாலத்தில் விளக்கு வசதி செய்யப்படாமல் இருண்டு கிடந்தது பெரும் குறையாக இருந்து வந்த நிலையில் சமீபத்தில் விளக்குகள் போடப்பட்டு இரவு நேரங்களில் பாலம் மின்னொளியில் ஜொலிக்கிறது.ஆனால் பாலத்தில் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தப்படாமல் இரு பகுதி நுழைவு வாயிலிலும் எதிர், எதிர் திசைகளில் வருபவர்கள் வளைவில் திரும்பும்போது மோதி விபத்துக்குள்ளாகும் நிலை தொடர்கிறது.பாலம் திறப்பதற்கு முன்பும், திறக்கப்பட்ட பின்பும் என இதுவரை 10க்கும் மேற்பட்ட விபத்துகளில் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.பஸ் நிலையத்தில் இருந்து பாலம் வழியாக செல்பவர்கள், பாலத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி வருபவர்களும் இதேபோன்று விபத்துக்குள்ளாகின்றனர்.பாலத்தின் இரு பகுதி நுழைவுவாயில் மையப்பகுதியில் ரவுண்டானா அமைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினால் விபத்துகளை தவிர்க்கலாம் என பல தரப்பில் இருந்தும் கலெக்டர் மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து போக்குவரத்து போலீஸ் சார்பில் தனியார் நிறுவனங்கள் உதவியுடன் ரவுண்டானா அமைக்க முடிவு செய்யப்பட்டது.இதற்கிடையே பாலத்தின் இரு புறங்களிலும் ரவுண்டான அமைக்க நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது.அதற்காக 75 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதனையொட்டி ரவுண்டானா அமைக்கும் பணிக்கான ஆயத்த வேலைகள் துவங்கியுள்ளது. அதற்கு முன்னோட்டமாக ரவுண் டானா அமைக்க உள்ள இடம் தேர்வு செய்து மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.அந்த இடத்தில் உள்ள காந்தி சிலையை இடையூறின்று மாற்றுவது என முடிவு செய்யப்பட்டு பின்னர் அதற்கு அவசியமில்லை எனவும் தீர்மானித்துள்ளனர்.இதற்கிடையே நெடுஞ்சாலைத்துறை கடலூர் கோட்ட பொறியாளர் வெங்கடேசன் தலைமையில் சிதம்பரம் உதவி கோட்ட பொறியாளர் சீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.ரவுண்டானா அமைக்கும் பணி விரைவில் முடிக்கப்பட்டால் ரயில்வே மேம்பால போக்குவரத்து சீரமைப்புக்கு முழு தீர்வு கிடைத்து விடும்.

source: dinamalar

No comments:

Post a Comment