மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் கடந்த இரண்டு நாட்களாக லேசான நில அதிர்வுகள் ஏற்பட்டன. கடந்த செவ்வாய் கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.3 முதல் 5.8 வரை பதிவானது. நேற்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் 5.8 புள்ளிகள் பதிவானது. இதை தொடர்ந்து மெக்சிகோவின் பஜா கலிபோர்னியா தீபகற்ப பகுதியில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9
புள்ளிகளாக பதிவானது. இந்த பூகம்பம் மெக்சிகோவுக்கும் பஜா தீபகற்ப பகுதிக்கும் நடுவே கார்டஸ் கடலில் 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.
Source: dinakaran
No comments:
Post a Comment