Islamic Widget

October 22, 2010

வழிபறி வழக்கில் தேடப்பட்ட 4 பேர் ஆயுதங்களுடன் கைது

பரங்கிப்பேட்டை:வழிபறி வழக்கில் தேடப்பட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சத்திரம் இன்ஸ் பெக்டர் (பொறுப்பு) புகழேந்தி, சப் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில்

ஈடுபட்டபோது திடீர்குப்பத் தில் ஆயுதங்களுடன் அமர்ந்திருந்த நால்வரை பிடித்து விசாரித்தனர்.அவர்கள் ஆலப்பாக்கம் ராஜீவ்காந்தி(24), வினோத் குமார் (25), நாகலிங்கம் (24), கீழ்பூவாணிக்குப்பம் மோகன் என்பதும், நால்வரும் வழிபறி செய்ய திட் டம் தீட்டியதும் தெரிந்தது. மேலும் அவர்கள் நால் வரும் புதுச்சேரியைச் சேர்ந்த விமல்குமாருடன் சேர்ந்து கடந்த மாதம் 11ம் தேதி ஆலப்பாக்கம் அருகே ஆம்னி வேனில் வந்த முதியவரை தாக்கி 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்றதும் தெரியவந்தது.புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து ராஜீவ் காந்தி உட்பட நால்வரை கைது செய்து அவர்களிடம் இருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். மேலும் விமல்குமாரை தேடி வருகின்றனர்.


Source:  Dinamalar

No comments:

Post a Comment