சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை பணிப்பெண்ணான ரிசானா நபீக்கின் ஜனாசா அந்த நாட்டிலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
ரிசானாவின் ஜனாசாவை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கோரிக்கை விடுத்தது.
எனினும் சவுதி சட்டத்திற்கு அமைய சடலத்தை இலங்கைக்கு அனுப்பி வைக்க முடியாதென சவுதி அரசு அறிவித்துவிட்டது.
இதனால் ரிசானாவின் ஜனாசா சவுதியிலேயே அடக்கம் செய்யப்பட்டதாக அங்குள்ள இலங்கை தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
4 மாத குழந்தையை கொலை செய்ததாக குற்றம் சுமத்தி மரண தண்டனை விதிக்கப்பட்ட ரிசானா நபீக் நேற்று கழுத்து வெட்டி கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நன்றி: adaderana.lk
No comments:
Post a Comment