பரங்கிப்பேட்டை:கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 500-க்கும் மேற்பட்டோர், மீன் பிடிப்பதற்காக அண்மையில் கடலூர் மாவட்டக் கடலோரப் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வந்து உள்ளனர்.கடலூர் மாவட்டத்தில் 52 கி.மீ. தூரம் கடற்கரை உள்ளது. இதில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள்தான் பெரும்பாலும் மீன் பிடிக்கிறார்கள். ஆழ் கடலில் வெளிநாட்டுக் கப்பல்கள் மீன் பிடிக்கின்றன. கடலூர் மாவட்டக் கடல் பகுதி, இலங்கை ராணுவத்தின் அட்டூழியங்களுக்கு அப்பாற்பட்ட, பாதுகாப்பான பகுதியாக அமைந்து இருப்பதாக, கடலூர் மீனவர்கள் தெரிவிக்கிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் தங்கள் படகுகளுடன் வந்து, கடலூர் மாவட்டக் கடல் பகுதியில் மீன்பிடிக்கத் தொடங்கி இருப்பதாக, கடலூர் மாவட்ட மீனவர்கள் தெரிவிக்கிறார்கள். பெரும்பாலும் கன்னியாகுமரி மாவட்டக் கடல் பகுதியில் இயற்கை இடர்பாடுகள் ஏற்படும்போதும் மீன்வளம் குறைவாக இருக்கும்போதும், இவ்வாறு இடம் பெயர்ந்து மீன்பிடிக்க வந்து இருப்பதாகக் கடலூர் மீனவர்கள் தெரிவிக்கிறார்கள் கடலூர் மாவட்டக் கடலோர கிராமங்களான நஞ்சலிங்கம்பேட்டை, சித்திரைப்பேட்டை, அய்யம்பேட்டை, முடசலோடை, ரெட்டியார்பேட்டை, எம்.ஜி.ஆர்.திட்டு மற்றும் பரங்கிப்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி உள்ளனர்..பிப்ரவரி கடைசி வாரத்தில், கடலூர் மாவட்டத்துக்கு வந்து இருக்கும் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள், மே மாதம் வரை இங்கு தங்கி மீன் பிடிப்பர் என்று கூறப்படுகிறது. கடலூர் பகுதியில் மிகப்பெரிய விசைப் படகுகள் மட்டுமே மரத்தால் செய்யப்பட்டவை. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்ணாடி இழைப் படகுகள் இங்குள்ளன. கண்ணாடி இழைப் படகுகள் உடைந்து சேதம் அடைந்தால் பழுதுபார்க்க இயலாது. ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து வந்து இருக்கும் இவர்கள் கேரள மாநிலத்தில் மரத்தால் செய்யப்பட்ட விசைப் படகுகளை பயன்படுத்துகிறார்கள். இவை அதிவேகமாகச் செல்லக் கூடியவை என்று கூறப்படுகிறது.மேலும் கரையில் இருந்து 50 கி.மீ. தூரம் வரை சென்று மீன் பிடிக்கும் இவர்கள், பெரிய வகை மீன்களை மட்டுமே பிடிக்கிறார்கள். பிடிக்கும் மீன்கள் அனைத்தும், மீன் கொள்முதல் செய்யும் நிறுவனங்களுக்கே விற்பனை செய்யப்படுகின்றன.இது குறித்து கடலூர் மாவட்ட மீனவர் பேரவைத் தலைவர் சுப்புராயன் கூறுகையில், "முன்பெல்லாம் அதிக அளவில் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடலூர் பகுதிகளுக்கு வருவது உண்டு. சில ஆண்டுகளாக அவர்களின் வருகை குறைவாக இருந்தது. தற்போது மீண்டும் வரத் தொடங்கி உள்ளனர். தற்போது 100 படகுகள் வரை கடலூர் மாவட்டத்துக்கு வந்துள்ளன. ஒவ்வொன்றிலும் 5 மீனவர்கள், மீன்பிடித் தொழிலுக்குச் செல்வர். அவர்கள் பெரும்பாலும் ஆழ்கடலில் கிடைக்கும் பெரிய வகை மீன்களையே பிடிக்கிறார்கள்' என்றார்.
Source: dinamani

No comments:
Post a Comment