கிள்ளை : சி.முட்லூர் வெள் ளாற்று பாலத்தில் மின்விளக்கு வசதி அமைக்க வேண்டும் என பொதுநல அமைப்பு அரசுக்குகோரிக்கை விடுத்துள்ளது. அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: சிதம்பரம் அருகே சி.முட்லூர் - பி.முட்லூர் இணைக்கும் வகையில் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வெள்ளாற்றில் மேம்பாலம் கட்டப்பட்டது. தற்போது இச்சாலை திறப்பு விழா நடந்து போக்குவரத்திற்கு அனுமதிக்கவில்லை.
ஆனால் கனரக வாகனங்கள் இயக்கப்படுகிறது. அதிக அளவில் வாகனங்கள் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. பாலத்தில் விளக்கு வசதி இல்லாததால் அடிக்கடி விபத்து அதிகரித்து வருகிறது. எனவே தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பு போர்க்கால அடிப்படையில் விளக்கு வசதி செய்து போக்குவரத்திற்கு பாலத்தை திறக்க வேண்டும். இவ்வாறு முருகையன் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
Source: Dinamalar

No comments:
Post a Comment