Islamic Widget

January 26, 2011

கடலூர் மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினம்

கடலூர் : தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடலூர் மாவட்டத்தில் நேற்று விழிப்புணர்வு கூட்டம் மற்றும் ஊர்வலம் நடந்தது. கடலூர்: திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் துவங்கிய ஊர்வலத்திற்கு டி.ஆர்.ஓ., ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கலெக்டர் சீத்தாராமன் துவக்கி வைத்தார்.
 ஊர்வலத்தில் என்.எஸ்.எஸ்., மாவட்ட தொடர்பு அலுவலர் திருமுகம் தலைமையில் பள்ளி மாணவ, மாணவிகள் சென்றனர். ஆர்.டி.ஓ., முருகேசன் மாவட்ட வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வீரராகராவ், எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ், தாசில்தார் அசோகன் பங்கேற்றனர். பண்ருட்டி: அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். தாசில்தார் அனந்தராமன், தேர்தல் துணை தாசில்தார் ரங்கநாதன் பேசினர். திட்டக்குடி: அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஊர்வலத்தை தாசில்தார் அமுதா துவக்கி வைத்தார். தேர்தல் துணை தாசில்தார் திருநாவுக்கரசு, ஆர்.ஐ., செந்தில்நாதன் பங்கேற்றனர். பெண்ணாடத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சையத்ஜாபர் தலைமை தாங்கினார். விருத்தாசலம்: அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் ஊர்வலத்திற்கு ஆர்.டி.ஓ., முருகேசன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். தாசில்தார் சரவணன், தேர்தல் துணை தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, தலைமை ஆசிரியர் முருகேசன் பங்கேற்றனர். பரங்கிப்பேட்டை: பு.முட்லூர் அட்சயாமந்திர் மேல்நிலைப் பள்ளியில் ஊர்வலத்தை தாளாளர் புரு÷ஷாத்தமன் துவக்கி வைத்தார். பின்னர் நடந்த விழாவிற்கு பேரூராட்சி துணைத்தலைவர் செழியன் தலைமை தாங்கினார். காட்டுமன்னார்கோவில்: அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் வெங்கடாசலபதி தலைமை தாங்கினார். சமூக நல தாசில்தார் ராமச்சந்திரன், தேர்தல் துணை தாசில்தார் வெங்கடாசலம், வருவாய் ஆய்வாளர் இளங்கோவன், வி.ஏ.ஓ., முபாரக் அலி பங்கேற்றனர். குறிஞ்சிப்பாடி: வேலாயுதம் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர். சிதம்பரம்: முட்லூர் அரசு கல்லூரியில் பியூபுல் டிரஸ்ட், நுகர்வோர் குழுமம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு ஆர்.டி.ஒ., இந்துமதி தலைமை தாங்கினார். தாசில்தார் காமராஜ், கல்லூரி முதல்வர் சேரமான், நுகர்வோர் குழு செயலர் அப்பாவு, பொருளாளர் சிவராமசேது, அரிமா சங்க விஜயகாந்த், சதீஷ்குமார், என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் சேகர் பங்கேற்றனர். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரின் விழிப்புணர்வு ஊர்வலத்தை ஆர்.டி.ஒ., இந்துமதி துவக்கி வைத்தார். இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் பங்கேற்றனர். பல்வேறு இடங்களில் வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.




Source: Dinamalar

No comments:

Post a Comment