Islamic Widget

January 11, 2011

கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் ஓட்டுப்பதிவு

கடலூர் : கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நேற்று நடந்தது. காலியாக உள்ள உள்ளாட்சி இடங்களுக்கு கடந்த டிசம்பர் 22ம் தேதி முதல் 29ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. 30ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. ஜனவரி 3ம் தேதி மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன. மங்களூர் ஊராட்சிக்கு 23வது வார்டு கவுன்சிலர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
 மீதமுள்ள காட்டுமன்னார்கோவில் அறந்தாங்கி ஊராட்சி தலைவர் பதவிக்கும், மங்களூர் ராமநத்தம் ஊராட்சி தலைவர் பதவிக்கும் நேற்று தேர்தல் நடந்தது. அதில் அறந்தாங்கி ஊராட்சியில் 73 சதவீதம், ராமநத்தத்தில் 62 சதவீதம் என இரு ஊராட்சிகளிலும் சராசரியாக 67 சதவீத ஓட்டுகள் பதிவாயின. விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை 2வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 79 சதவீதம், வானூர் 8வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 82 சதவீதம், கண்டமங்கலம் ஒன்றியம், பக்கிரிப்பாளையம் ஊராட்சித் தலைவருக்கு 83 சதவீதம், சங்கராபுரம் தாலுகா தேவபாண்டலம் 2வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 38 சதவீதம், தடுத்தாட்கோண்டூர் 3வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 56 சதவீதம் மற்றும் செஞ்சி பேரூராட்சி 15வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு 77 சதவீதம் ஓட்டுகளும் பதிவானது. இந்த 6 பதவிகளுக்கான தேர்தலில் சராசரியாக 76 சதவீத ஓட்டுகள் பதிவாகின. நாளை (12ம் தேதி) ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

Source:dinamalar

No comments:

Post a Comment