Islamic Widget

January 10, 2011

ஈரானில் விமான விபத்து: 70 பேர் பலி!

ஈரானின் வடமேற்குப் பகுதியில் ஞாயிற்றுக் கிழமையன்று நடைபெற்ற விமான விபத்தில் 70 பேர் பலியாகி உள்ளதாக ஈரானிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
ஈரானியத் தலை நகர் டெஹ்ரானில் இருந்து ஞாயிற்றுக் கிழமையன்று புறப்பட்ட விமானம் ஈரானின் வடக்குப் பகுதியில் உள்ள ஒருமியாஹ் என்ற ஊருக்கு மாலை 4.15 மணிக்கு வந்து சேர்ந்த போது விமானம் வெடித்துச் சிதறியது என்று கூறப்படுகிறது.
இந்த விமானத்தில் மொத்தம் 102 பேர் பயணம் செய்ததாகவும் அவர்களில் 70 பேர் பலியாகிவிட்டதாகவும் ஈரானிய செம்பிறைச் சங்கம் கூறியுள்ளது.
போயிங் 727 வகையைச் சேர்ந்த இந்த விமானம் சுமார் 40 ஆண்டுகளுக்கும் முந்தைய தயாரிப்பு என்று தகவல்கள் கூறுகின்றன.ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்திருப்பதால், புதிய விமானங்கள் வாங்குவதோ, விமான உதிரி பாகங்கள் வாங்குவதோ ஈரானுக்குச் சிரமம். எனவே ஈரானில் பெரும்பாலும் பழைய விமானங்களே புழக்கத்தில் இருந்து வருகின்றன. அங்கு விமான விபத்துகளும் அதிகம் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment