Islamic Widget

September 30, 2010

பாபர் மஸ்ஜித் இடத்தை மூன்றாக பிரிக்க வேண்டுமாம்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

பாபர் மஸ்ஜித் தீர்ப்பு இன்று மாலை 4 மணிக்கு வெளியானது. தீர்ப்பை 3 நீதிபதிகள் வெளியிட்டுள்ளனர்.




தீர்ப்பின் முழு விபரம் இன்னும் வெளிவரவில்லை. எனினும் தீர்ப்புக்கு பின் ஒரு சில வழக்கறிஞர்கள் லக்னோ நீதிமன்ற வளாகத்தில் பேட்டியளித்துள்ளனர்.



இடத்தை மூன்று பாகமாக பிரித்து அதில் ஒன்றை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற வக்கில் ஒருவர் பேட்டியளித்துள்ளார். மேலும் மூன்று நீதிபதிகளும் மூன்று விதத்தில் தீர்ப்பளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.



தீர்ப்பின் நகல் அலஹாபத் நீமன்ற இணையதளத்தில் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டு இருந்து. ஆனால் தற்போது அந்த இணையதளம் அதிக ட்ராஃபிக் காரணமாக வேலை செய்யவில்லை.



முழு விபரம் விரைவில்… இன்ஷா அல்லாஹ்!

No comments:

Post a Comment