Islamic Widget

March 01, 2012

மோடிக்கு ரத்தக்கறை படிந்த குர்தா பரிசு


புதுடெல்லி:நரமோடியால் முன்னின்று நடத்தப்பட்ட குஜராத் கலவரம் நடைபெற்று தற்போது  ஆண்டுகள் முடிவுற்ற நிலையில் அதனுடைய நினைவுதினம் இறைவணக்கங்கள், மெழுகுவத்தி ஏற்றுதல், கருத்தரங்கங்கள் மற்றும் மாநாடுகள் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நினைவுபடுத்தப்பட்டு வருகிறது.ஆனால் டெல்லியைச் சேர்ந்த பேஷன் டிசைனரான அசீமூர் ரஹ்மான் தனக்கென தனி பாணியில் தனது எதிர்ப்பை பதிவு
செய்துள்ளார்.
அசீமூர் ரஹ்மான் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா உட்பட பல அரசியல் தலைவர்களுக்கு ஆடைகளை வடிவமைத்துள்ளார். இவர் கடந்த திங்கள் குஜராத் கலவரத்திற்கு தனது எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக நரமோடிக்கு ரத்தம் பதிந்த காதி குர்தா ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
காதி காந்தியடிகளின் கொள்கைகளை எடுத்துக் கூறவும் மற்றும் ரத்தத்தை அவரின் தலைமையில் கடந்த 2002  ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த படுகொலைகளை ஞாபகப்படுத்தவும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் கலவரம் நடந்து 10  வருடம் கழிந்தும் மோடியால் அந்த கரையை இன்னும் துடைக்க முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் ரஹ்மான் தான் செய்த ஆடை வடிவமைப்பை குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த வேலைபாடுகளை கோத்ரா ரயில் எரிப்பிற்குப்பின் பின் குஜராத்தில் நடந்த கலவரத்தின் நினைவுச் சின்னமாக கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தாம் குஜராத்தில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு மிகவும் வருந்துவதாகவும் எனவே தனது சொந்த ரத்தத்தை குர்தாவில் தெளித்து மோடிக்கு அனுப்பியுள்ளதாகவும் இது மோடி தனது பொறுப்பை உணர்வதற்கே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கலவரம் நடந்து 10  வருடங்கள் ஆகியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றும் இன்னும் பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காக ஓடிக்கொண்டு இருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment