சவூதி அரேபியாவின் மன்னராக இருப்பவர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ். அவருக்கு 87 வயதாகிறது. இவர் கடுமையான முதுகு வலியின் காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ரியாத மாநகரிலுள்ள அப்துல் அஜீஸ் மெடிக்கல் சிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர பரிசோதனைகள் நடைபெற்றது. பரிசோதனையின் முடிவில் மன்னருக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினார்கள். எனவே அவருக்கு உடனடியாக நேற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றதாகவும் மன்னர் நலமுடன் இருப்பதாகவும் உள்துறை அமைச்சர் இளவரசர் நெய்பை மேற்கோள் காட்டி அரசுத்துறை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் "இறைவனுக்கு மிக்க நன்றி. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னர் அப்துல்லாஹ் கடந்த வருடம் நவம்பர் மாதம் முதுகு வலியின் காரணமாக அமெரிக்கா சென்று சிகிச்சைப் பெற்றார். அங்கு அவருக்கு முதுகெலும்பில் இரண்டு முறை அறுவை சிகிச்சை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment