Islamic Widget

October 18, 2011

இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது



கடலூர் : மாவட்டத்தில் நாளை ஓட்டுப் பதிவு நடைபெறவுள்ள உள்ளாட்சி பகுதிகளில் அனல் பறக்கும் பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. கடலூர் மாவட்டத்தில் உள்ள 6,492 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டமாக நடக்கிறது. அதில் முதல் கட்டமாக 3,012 பதவிகளுக்கான தேர்தல் நேற்று நடந்தது. இரண்டாம் கட்டமாக கடலூர், சிதம்பரம் நகராட்சிகள், குறிஞ்சிப்பாடி, வடலூர், திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை, அண்ணாமலை நகர், புவனகிரி, கிள்ளை, பரங்கிப்பேட்டை பேரூராட்சிகள், கடலூர், குறிஞ்சிப்பாடி, பரங்கிப்பேட்டை, மேல்புவனகிரி, கீரப்பாளையம், குமராட்சி, காட்டுமன்னார்கோவில் ஆகிய பகுதிகளில் உள்ள 3,480 உள்ளாட்சி பதவிகளில் 330 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
கடலூர் ஒன்றியத்தில் ஒரு ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு எவரும் மனு தாக்கல் செய்யவில்லை. மீதமுள்ள 3,149 பதவிகளுக்கு 11 ஆயிரத்து 626 பேர் போட்டியிடுகின்றனர். இதற்கான தேர்தல் நாளை (19ம் தேதி) நடக்கிறது. இப்பகுதிகளைச் சேர்ந்த 9 லட்சத்து 6 ஆயிரத்து 902 வாக்காளர்கள் ஓட்டுப்போட வசதியாக 1,855 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதனையொட்டி மேற்கண்ட பகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி கட்ட பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் முடிந்தது.

No comments:

Post a Comment