பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை பகுதிகளில் அரசியல் கட்சியினர் சுயேச்சை வேட்பாளர்களை சரிகட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.பரங்கிப்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவிக்கு ஆளுங்கட்சியான அ.தி.மு.க., வைத் தவிர மற்ற கட்சிகள் வேட்பாளர்களை இதுவரை அறிவிக்கவில்லை. முக்கிய கட்சியான தி.மு.க., - காங்., - பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியாக போட்டியிட உள்ளது.அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., கட்சிகள் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடப் போவதால் அனைத்து வார்டுகளிலும் சுயேச்சை வேட்பாளர்கள் களத்தில் இறங்கத் தயாராகி வருகின்றனர்.
உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் கட்சி பாகுபாடின்றி போட்டியிடும் வேட்பாளரை பொருத்தே வெற்றி வாய்ப்பு இருக்கும் என்பதும் அவர்கள் கணக்கு. குறிப்பாக 5வது வார்டில் அதிக நபர்கள் சுயேட்சையாக குதிக்கத் தயாராகி வருகின்றனர்.
இதனால் அ.தி.மு.க., - தி.மு.க., வினர்களுக்கு வெற்றி வாய்ப்பு பாதிக்கும் என்பதால் சுயேச்சை வேட்பாளர்களை சரிக்கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment