Islamic Widget

February 05, 2011

எகிப்து மக்கள் புரட்சி - அதிபர் முபாரக் கட்சி பதவியை ராஜினாமா

எகிப்தில் நடந்து வரும் அரசியல் சுனாமியின் ஒரு பகுதியாக, அதிபர் ஹூஸ்னி முபாரக், ஆளும் கட்சியின் தலைமை பொறுப்பிலிருந்து விலகினார். தற்போது கிளர்ச்சியில் ஈடுபட்டுவரும் மக்களின் கோபத்தை தணிக்கவும், தான் அறிவித்த தேர்தல் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாகவும், ஆளும் தேசிய ஜனநாயக கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.
அதே போல், ஹுஸ்னி முபாரக்கின் மகன் கெமால் முபாரக் மற்றும் கட்சியின் பொது செயலாளர் சஃவாட் எல் செரிப் ஆகியோரும் தங்களின் கட்சி பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். எனினும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், அதிபர் முபாரக் அதிபர் பதவியைவிட்டு உடனடியாக ராஜினாமா செய்யவேண்டும் என்ற கோரிக்கையில் மாற்றம் இல்லை என கூறியுள்ளனர். கடந்த இரு வாரங்களாக நடைபெற்று வரும் மக்கள் புரட்சியில் எகிப்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. தற்போது ராணுவமும் மக்களுடன் சேர்ந்துள்ளதால், எகிப்து அரசியலில் எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற நிலையுள்ளது. மேலும், மத்திய கிழக்காசியாவில் அரசியல் நிலைத்தன்மைக்கு அதிபர் ஹூஸ்னி முபாரக், பெரிதும் பங்காற்றியுள்ளதால் முபாரக் பதவி விலகினால், என்ன ஆகுமோ என்ற அச்சத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியா நாடுகள் உள்ளன.

Source: inneram

No comments:

Post a Comment