பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே கிள்ளை பகுதியில் கடல் சீற்றம் அதிகரித்துள்ளதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பரங்கிப்பேட்டைஅடுத்த கிள்ளை, சின்னவாய்க்கால், பில்லுமேடு, பட்டரையடி, முழுக்குத்துறை, எம்.ஜி.ஆர் திட்டு, முடசல்ஓடை, கூழையார் மற்றும் டி.எஸ்.பேட்டை பகுதியில் உள்ள மீனவர்கள் முடசல்ஓடை,
சின்னவாய்க்கால் மற்றும் பில்லுமேடு முகத்துவாரங்கள் வழியாக கடலில் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றனர். கடல் அலை நேற்று வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது. இதனால் சுற்றுப்பகுதியில் உள்ள மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை.இதனால் வெள்ளாறு மற்றும் உப்பனாற்றில் மீன் பிடித்தனர்.
Source: Dinamalar

No comments:
Post a Comment