அஜ்மீர்,பிப்.6:கடந்த 2007-ஆம் ஆண்டு அஜ்மீர் தர்காவில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் ஒரு ஹிந்துத்துவா பயங்கரவாதியை ராஜஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு படை கைதுச் செய்துள்ளது. பரத் மோகன் என்ற குஜராத் மாநிலத்தைச் சார்ந்த ஹிந்துத்துவா பயங்கரவாதிதான் கைதுச் செய்யப்பட்டவர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவரை வருகிற 11-ஆம் தேதி வரை ஏ.டி.எஸ் கஸ்டடியில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.சுவாமி அஸிமானந்தாவின் வாக்குமூலத்தைத் தொடர்ந்துதான் இக்கைது நடந்துள்ளது. இத்துடன் இவ்வழக்கில் கைதான ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது.இவ்வழக்கில் ஏற்கனவே கைதான அஸிமானந்தாவின் காவல் கால அவகாசத்தை பிப்ரவரி 11-ஆம் தேதிவரை நீதிமன்றம் நீட்டி உத்தரவிட்டது.
இதற்கிடையே சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்புத் தொடர்பாக விசாரணைச்செய்ய அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்புக் குற்றவாளிகளான லோகேஷ் சர்மா மற்றும் தேவேந்திர குப்தா ஆகியோரை தங்களது கஸ்டடியில் விட்டுத்தர சி.பி.ஐ கோரியுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

No comments:
Post a Comment