இலங்கைப் பிரதமர் ராஜபக்சே மீது அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அமெரிக்க வாழ் இலங்கைத்தமிழர்கள் மூவர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர். கடந்த ஆண்டு நடைபெற்ற போரில் தங்களது உறவினர்கள் படுகொலை செய்யப்பட்டு விட்டதாலும்
, தமிழர்களின் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள் சேதம் அடைந்ததாலும் இலங்கைப் பிரதமர் ராஜபக்சே 30 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வாஷிங்டனைச் சார்ந்த பிரபல வழக்குரைஞர் புருஸ் பெய்ன் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார். 1991 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சித்ரவதையால் பாதிக்கப்பட்டோர் தடுப்பு சட்டத்தின் படி அமெரிக்க வாழ் இலங்கைத் தமிழர்கள் மூன்று பேரின் சார்பில் பெய்ன் இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளார்.இது தொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கை அதிபரின் ஊடக பேச்சாளர் பந்துல ஜெயசேகர விடுதலைப்புலித் தீவிரவாதிகளின் இவ்வாறான பொய்ப் புகார்களுக்கு எவ்வித மதிப்புமில்லை,இவை ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக போடப்பட்டவை என்றும் இதற்காக தங்களால் நேரத்தை வீணடிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.Source:inneram
No comments:
Post a Comment