Islamic Widget

July 30, 2010

இந்தியாவின் முதல் முஸ்லிம் தலைமைத் தேர்தல் கமிஷனராக எஸ்.ஒய்.குரேஷி இன்று பொறுப்பேற்கிறார்.


புதுடில்லி : "தேர்தலின் போது கறுப்பு பணம் முக்கிய பங்கு வகிப்பதை தடுக்க விதிமுறைகள் உருவாக்கப்படும்' என, புதிய தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி தெரிவித்துள்ளார். தலைமை தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லா இன்று ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, புதிய தலைமை தேர்தல் கமிஷனராக எஸ்.ஒய்.குரேஷி இன்று பொறுப்பேற்கிறார்.
பி.டி.ஐ., செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியின் விவரம் வருமாறு: தலைமை தேர்தல் கமிஷனராக கோபால்சாமி இருந்த போது, சக தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லாவை பதவியிலிருந்து நீக்க அரசுக்கு சிபாரிசு செய்தார். இது தேர்தல் கமிஷனை அவமதிப்பதாகும். கடந்த 90ம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட இந்த நடைமுறை மாற்றப்படவேண்டும். சக தேர்தல் கமிஷனரால் மற்றொரு கமிஷனர் நீக்கப்படும் நடைமுறை சரியானதல்ல. தேர்தலின் போது கறுப்பு பணம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை கட்டுப்படுத்தும் விதத்தில் நடைமுறை கொண்டு வரப்படும். நம்நாட்டில் தற்போது 1,100 கட்சிகள் உள்ளன. இவற்றில் ஏழு கட்சிகள் தேசிய கட்சிகள். 40 கட்சிகள் மாநில கட்சிகள். மீதமுள்ளவை "லெட்டர்பேடு' கட்சிகளாக உள்ளன. ஒவ்வொரு அரைமணி நேரத்துக்கும் புதிய கட்சி உருவாகிக் கொண்டு இருக்கிறது. தேர்தல் கமிஷன் ஆய்வு செய்ததில் ஒரு கட்சியின் அலுவலகம், டீ கடையில் செயல்பட்டு வந்தது. மற்றொரு கட்சிக்கு அலுவலகமே இல்லை. பெயரளவில் உள்ள கட்சிகளை அங்கீகரிக்க மறுக்கும் அதிகாரத்தை தேர்தல் கமிஷனுக்கு அளிக்க வேண்டும். தேர்தல் சீர்திருத்த நடவடிக்கைகான மாதிரிகள் தயாராக உள்ளன. விரைவில் இவற்றுக்கு செயல்வடிவம் கொடுக்கப்படும். இவ்வாறு குரேஷி கூறினார்.
நன்றி தினமலர்

No comments:

Post a Comment